“உடனே விடுவிக்க வேண்டும்”..ஹமாஸ்க்கு டிரம்ப் எச்சரிக்கை! நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்!

ஜனவரி மாதம் தனது பதவியேற்புக்கு முன்பாக இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாஸ்க்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

benjamin netanyahu donald trump

வாஷிங்டன் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்தே இஸ்ரேல் -ஹமாஸ் போர் நடந்து வருவது இன்னும் முடிவுக்கு வராமல் பரபரப்பான ஒரு சூழலில் தான் இருக்கிறது. இந்த போர் நடைபெற்ற போது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூரமான தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, யாரெல்லாம் கண்ணில் படுகிறார்களோ அவர்களும் தாக்கி நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து சென்றார்கள்.

இதனால் இன்னுமே கடும் கோபமடைந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எங்கள் மீதே தாக்குதல் நடத்துகிறீர்களா? உங்களை அழிக்கும் வரை ஓயமாட்டோம் கண்டிப்பாக தாக்குதல் மீண்டும் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தது இருந்தார். எச்சரிக்கைக்கு பிறகும் மாறி மாறி இஸ்ரேல் -ஹமாஸ் போர் நடத்தி வருகிறது. இந்த மோதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த போரின் போது பிடித்து செல்லப்பட்ட பணய கைதிகளை மீட்கும் முயற்சியும் ஒரு பக்கம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் செய்திகள் மூலம் வெளிவந்த வண்ணம் தெரிகிறது. இந்த சூழலில், அமெரிக்க-இஸ்ரேலியரான ஈடன் அலெக்சாண்டர்  என்ற நபர் தன்னை விடுவிக்க ஏற்பாடு செய்யுங்கள் என கண்ணீரை விட்டு கெஞ்சி வேண்டுகோள் விடுத்த வீடியோ சமூக வலைத்தங்களில் சமீபத்தில் வைரலானது.

அந்த வீடியோ டொனால்ட் டிரம்ப் கண்ணீற்கு பட்டதாக தெரிகிறது. உடனடியாக வீடியோ வைரலாக பரவிய நிலையில்,  டொனால்ட் டிரம்ப் ” நான் ஜனவரி 20-ந்தேதி நான் ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்பே பணய கைதிகள் அனைவரும் கண்டிப்பாக விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி விடுவிக்கப்படவில்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். உடனடியாக அவர்களை விடுதலை செய்யுங்கள்” என எச்சரிக்கை விடுக்கும் வகையில் டொனால்ட் டிரம்ப் பேசியிருந்தார்.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்பின் அறிக்கைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” டிரம்ப் எங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளது பணயக்கைதிகளை விடுவிக்க எங்களின் தொடர் முயற்சிக்கு  மற்றொரு சக்தியை சேர்த்துள்ளது.  இந்த நேரத்தில் அதிபர் டிரம்ப்புக்கு நான் இதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” எனவும் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்