பதிவியை இழிவுப் படுத்தி டிரம்ப் பேச்சு? பதிலடி கொடுத்த கமலா ஹாரிஸ் ..!
அமெரிக்காவில் தேர்தல் நடைபெற இன்னும் 15 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது .
பென்சில்வேனியா : அமெரிக்காவில் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இருவரும் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்போதும் இருவரும் மாறி மாறி ஒருவரை பற்றித் தாக்கியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் ஈடுபட்டபோது “ஷிட் துணைத் தலைவர்” என்பது போலக் கமலா ஹாரிஸை விமர்சித்துப் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் கமலா ஹாரிஸ் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது ” துணைப் பிரதமர் என்றால் அந்த பதவிக்குத் தரமாக இருக்கவேண்டும் என்பது போல டொனால்ட் டிரம்ப் முன்னதாக என்னை விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். அவருக்கு நான் சொல்லக்கொள்வது என்னவென்றால், தரம் என்பது பதவியில் இல்லை. அந்த பதிவு கிடைத்தால் நம்மளுடைய நாட்டை எப்படி வைத்து இருக்கிறோம் என்பது தான் தரம்.
அப்படிப் பார்த்தால் நம்மளுடைய அமெரிக்க நாடு மிகவும் சிறந்த நாடக இருக்கிறது. உலகத்தில் சட்டப்படியும், விதிமுறைகளின் படியும் ஜனநாயகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமெரிக்க திகழ்கிறது. எனவே, ஒன்றுமே தெரியாமல் இழிவாக மட்டும் பேசும் டொனால்ட் டிரம்ப் இந்த முறை தேர்தலில் வெற்றிபெறக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
என்னைப்பொறுத்தவரையில் நான் இப்போது கூட வெளிப்படையாகச் சொல்வேன். அவர் இன்னும் சரியாக மக்களைச் சம்பாதிக்கவில்லை” எனக் கமலா ஹாரிஸ் பேசினார். தொடர்ந்து பேசிய அவர் தனக்கு மக்கள் ஆதரவு அருமையாக இருப்பது பற்றியும் பேசினார்.
இது குறித்து அவர் பேசியதாவது “முன்பைவிட இப்போது மக்கள் மிகவும் மாறியிருக்கிறார்கள். யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் அவர்கள் சரியாகச் செயல்படுகிறார்கள். அப்படித் தேர்வு செய்த காரணத்தால் தான் நான் இங்கு இந்த இடத்தில் நின்று கொண்டு இருக்கிறேன்” எனவும் கமலா ஹாரிஸ் பேசியுள்ளார்.