வெள்ளை மாளிகையில் மார்க் ஜுக்கர்பெர்குடன் இரவு உணவு! கடுமையாக ட்ரோல் செய்யப்பட்ட டிரம்ப்!
கடந்த வாரம் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வெள்ளை மாளிகைக்கு இரவு உணவிற்கு வந்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை அடுத்து, அவர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு வீடியோவில், டொனால்ட் டிரம்ப், “மார்க் ஜுக்கர்பெர்க் அற்புதமானவர். இரவு முழுவதும் என்னை முத்தமிட்டார்.’ நான் உங்களை விரும்புகிறேன், வாழ்த்துகிறேன்,” என்று டிரம்ப் கடந்த சனிக்கிழமை கூறினார். அதன்பிறகு ட்விட்டர் பயனர்கள் டொனால்ட் டிரம்ப் 2021 ஜனவரியில் 45 வது POTUS பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதை சுட்டிக்காட்டியும் மற்றும் அவர் பேஸ்புக்கில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியும் ட்ரோல் செய்தனர்.
Donald Trump thinks that Mark Zuckerberg came to see him at the White House last week. ???? pic.twitter.com/dDm8UDm0NQ
— That Gay Guy Candle Co. (@gayguycandleco) September 4, 2022