Categories: உலகம்

சிறையில் 20 நிமிடம்..! “இனி சரணடைய மாட்டேன்” டிரம்ப் எலான் மஸ்க் வேற லெவல் டிவீட் !

Published by
கெளதம்

தேர்தல் முறைகேடு வழக்கில் சிறையில் சரணடைந்து ஜாமீனில் வெளிவந்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இனி சரணடையப்போவதில்லை என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அந்த பதிவுக்கு எலான் மஸ்க் ரீ ட்வீட் செய்துள்ளார், அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜார்ஜியா மாகாணத்தில் 2020ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக டிரம்ப் உள்ளிட்ட 18 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செயப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஜார்ஜியாவின் அட்லாண்டா கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த நிலையில், 19 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு செய்தது. அதன்படி, டிரம்ப் உள்பட வழக்கில் தொடர்புடைய 19 பேருக்கும் கைது வாரண்டு பிறப்பித்து வருகிற 25-ந் தேதி இன்றைய நாளுக்குள் தாங்களாக முன்வந்து ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் ஜார்ஜியா வழக்கு தொடர்பாக, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அட்லாண்டா சிறையில் சரணடைந்தார். பலத்த பாதுகாப்புடன் சிறையில் சரணடைந்த அவருக்கு, சிறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்தனர்.

அதன்படி, டிரம்பின் உயரம் ஆறு அடி மூன்று அங்குலம் (1.9 மீட்டர்), அவரது எடை 215 பவுண்டுகள் (97 கிலோகிராம்) மற்றும் அவரது முடி நிறம் “ப்ளாண்ட் அல்லது ஸ்ட்ராபெர்ரி” என சிறைச்சாலையால் பட்டியலிடப்பட்டுள்ளது. அவரது உடல் அடையாளங்கள், கைரேகை மற்றும் புகைப்படம் பதிவு செய்வது தான் பொதுவாக மக்ஷாட் (Mugshot) என்று அழைக்கப்படுகிறது.

இதற்காக வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே அட்லாண்டாவின் ஃபுல்டன் கவுண்டி சிறையில் இருந்த​​ ட்ரம்ப் மீது, 13 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையாக செலுத்திய பின், விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்டதும், உடனடியாக விமானம் மூலம் நியூஜெர்சி புறப்பட்டார்.

இந்த நிலையில், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட  டொனால்ட் டிரம்ப் தனது X  தள பக்கத்தில், Mugshot-ன் போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, “தேர்தல் குறுக்கீடு! ஒருபோதும் சரணடைய மாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு எலான் மஸ்க் ரீ ட்வீட் செய்து, அடுத்த லெவல் ( Next-level) என்று குறிப்பிட்டுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…

29 minutes ago

“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…

35 minutes ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

45 minutes ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

2 hours ago

கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா  சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…

2 hours ago

மன்னராட்சி மன நிலைக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் – அண்ணாமலை காட்டம்!

சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…

2 hours ago