அமெரிக்காவில் 198 பயணிகளுடன் சென்ற ரயில்..! லாரி மீது மோதி தடம் புரண்டு விபத்து..!
அமெரிக்காவில் சுமார் 198 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் சென்ற ரயில், தண்ணீர் லாரி மீது மோதி தடம் புரண்டது.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் 198 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் சென்ற ஆம்ட்ராக் ரயில், தண்ணீர் லாரி மீது மோதியுள்ளது. இந்த மோதலில் ரயிலில் உள்ள 7 பெட்டிகளில் 3 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டுள்ளது.
ஆம்ட்ராக் ரயில் சியாட்டிலில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, காலை 11:15 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து மீட்பு துறையினர் ரயிலில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர் உட்பட ரயிலில் பயணம் செய்தவர்களில் 14 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது, இந்த விபத்து குறித்து உள்ளூர் அதிகாரிகள் முழு விசாரணையை நடத்தி வருகின்றனர்.
BREAKING: Passengers are stranded afer an Amtrak train partially derailed after it crashed into an unoccupied water truck on the tracks in Moorpark.#Ventura #Moorpark pic.twitter.com/8Gu1o8a7KW
— Bryan Hernandez (@newswithbryanh) June 28, 2023