ரஷ்யாவில் தடம் புரண்ட ரயில்.! ஆற்றில் கவிழ்ந்து 70 பேர் காயம் ..!

Russia Train Accident

ரஷ்யா: வடக்கு ரஷ்யாவின் கோமியின் குடியரசு பகுதியில் பயணிகள் ஏற்றி சென்ற ரயில் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த சம்பவத்தில் சுமார் 70 பயணிகள் காயமடைந்தனர்.

இந்த ரயில் வோர்குடா நகரத்திலிருந்து ஆர்க்டிக் வட்டம் வழியாக நாட்டின் தெற்கில் கருங்கடலில் உள்ள நோவோரோசிஸ்க் துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த வேலையில் கோமி குடியரசில் உள்ள சிறிய நகரமான இன்டா அருகே ரயில் தடம் புரண்டள்ளது.

இந்த விபத்தில் ரயிலின் 9 பெட்டிகள் அருகில் இருந்த கோமி ஆற்றில் கவிழ்ந்துள்ளது. ஆற்றில் கவிழ்ந்த அந்த 9 பெட்டிக்குள் சுமார் 215 பயணிகள் இருந்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 70 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும், காயமடைந்தவர்களில் 7 பேர் தீவிர படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அதிர்ஷ்டவசமாக விபத்தின் போது அருகில் இருந்த கோமி ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது என்னவென்றால் கோமி பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளது இதனால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு அங்குள்ள சில உள்ளூர் ஊடகங்களின்படி செய்திகள் தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்