சோகம்..பயணிகள் வேனும் சரக்கு லாரியும் மோதி விபத்து..! 26 பேர் பலி..!

Maxico Acc

மெக்சிகோவில் பயணிகள் வேனும் சரக்கு லாரியும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

மெக்சிகோவின் வடக்குப் பகுதியில் பயணிகள் வேனும் சரக்கு லாரியும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மோதலினால் பாதிப்படைந்த வேன் மற்றும் சரக்கு டிரெய்லர் தீப்பிடித்து எறிந்துள்ளது.

இதனால் 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மாநிலத் தலைநகர் சியுடாட் விக்டோரியாவுக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்துக்குறித்து தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஆனால், விபத்திற்கு காரணமான லாரியில் டிரெய்லர் மட்டுமே அங்கு இருந்ததால் சரக்கு லாரி ஓட்டுநர் அதனை கழட்டி விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், பாதிக்கப்பட்டவர்களில் பலர், வெளியூர் சென்று திரும்பிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிற நிலையில் அதிகாரிகள் அதனை உறுதிப்படுத்தவில்லை. இந்த  விபத்து குறித்த காரணம் தெரியாதததால் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்