New Jersey [file image]
America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில் உள்ள ஒருவர் தனது ஆறு வயது மகன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓடுமாறு கட்டாயப்படுத்தினார். அந்த சிறுவன் ஒரு கட்டத்தில் ஓடி ஓடி களைத்து கிழே விழுந்தும், அதனை கண்டுகொள்ளத தந்தை மீண்டும் மீண்டும் ஓட வைத்துள்ளார்.
இதனையடுத்து, சில நாட்கள் கழித்து உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுவன் ஒரு கட்டத்தில் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 2, 2021-ல் உயிழந்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சோக சம்பவம் தொடர்பாக, தற்போது வெளிவந்துள்ள வேதனை அளிக்க கூடிய வீடியோவில், இரக்கமற்ற தந்தை (கிறிஸ்டோபர் கிரிகோர்) தனது 6 வயது மகனை (கோரி மிக்கியோலோ) உடல் பருமனாக இருப்பதால் உடற்பயிற்சி மையத்தில் டிரெட்மில்லில் ஓடுமாறு கட்டாயப்படுத்தியது தெளிவாக தெரிகிறது.
இந்த சம்பவத்தின் காட்சிகள் நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது, இந்த வீடியோவை பார்த்து சிறுவனின் தாய் கதறி அழுவதும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது ஆதங்கத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
உயிரிழந்த சிறுவனின் பிரேத பரிசோதனையில் சிறுவனின் மரணம் ஒரு கொலை என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டநிலையில், ஆயுள் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இப்பொது, உயிரிழந்த சிறுவனின் தந்தை கிறிஸ்டோபர் கிரிகோர் சிறையில் இருக்கிறார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…