ஜெர்மனியில் தன்னை பார்பி டாலாக மாற்ற 70 ஆயிரம் டாலர்களுக்கு மேல் செலவு செய்த 21 வயது இளம்பெண்.
ஜெர்மனியில் பிறந்த ஜெசிகா என்ற இளம்பெண் தற்போது தனது பெயரை ஜெசி பண்ணி என்று மாற்றியுள்ளார். இவர் தன்னை பார்பி டால் மாற்றுவதற்காக 70 ஆயிரம் டாலர்களுக்கு மேல் அழகுசாதன அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு உள்ளார். இவருக்கு வயது 21. இவரது இந்த மாற்றத்தால் அவரது குடும்பத்தார் அவரை முழுவதுமாக புறக்கணித்துள்ளனர்.
இதுகுறித்து ஜெசி பண்ணி கூறுகையில், தன்னை பார்பி டால் ஆக மாற்ற மேலும் பல அறுவை சிகிச்சைகள் செய்வதை தன்னால் கற்பனை செய்து பார்க்க முடியும் இருப்பினும் அவரது மாற்றம் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு சாதகமாக இல்லை என்று கூறியுள்ளார். மேலும் தனது தொலைபேசி அழைப்புகள் தடுக்கப்பட்டதாகும் குறுஞ்செய்திகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. குறிப்பாக என் சகோதரர் மற்றும் என் தாத்தா பாட்டிகள் உடன் தொடர்பில் இருக்க விரும்புகிறேன். நான் என் உடல் தோற்றத்தை மாற்றிக் கொண்டால் அவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.
தனது பெற்றோர்கள் கல்வி குறித்து மிகவும் பழைமைவாத கருத்துக்களை கொண்டுள்ளதாகவும், தனக்கு 17 வயதை எட்டிய போது தனது உடலை மாற்றம் செய்யும் முயற்சியில் தொடங்கியதாகவும், இதனால் பெற்றோர் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் கூறியுள்ளார்.
ஜெஸ்ஸி தனது முதல் மார்பக அறுவை சிகிச்சைக்கு பின், மார்பக வளர்ச்சி தனக்கு பெரிய தன்னம்பிக்கை கொடுத்ததாகவும், இப்போது தனது முழு உடலையும் பார்பி டால் வடிவமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…