எரிமலை வெடித்ததில் சுற்றுலா பயணி ஒருவர் பலி ! ஒருவர் படுகாயம் !

Default Image

இத்தாலியின்  வடக்கு பகுதியில் உள்ள சிசிலியன் பிராந்தியத்தில் ஸ்ட்ரோம்போலி  என்ற தீவு உள்ளது.பிரபல சுற்றுலா தலமான இந்த தீவில் கடலை ஒட்டி ஒரு எரிமலை ஓன்று உள்ளது.அந்த எரிமலையில் வெடிப்பு ஏற்படுவதும் ,ஏரிகுழம்புகள் வெளியேறிவதும் வழக்கமாக நடப்பது தான்.

ஸ்ட்ரோம்போலி  தீவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த தீவில் உள்ள மலையடி வாரத்தில் இருந்து 924 மீட்டர் தூரம் வரை மலையேற்ற பயிற்சியில் ஈடுபடவும் , உருகிய நிலையில் இருக்கும் பாறைகளை பார்க்கவும் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கடந்த 03-ம் தேதி தீடிரென அந்த எரிமலை வெடித்தது. அப்போது மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டு இருந்த 30 -க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கடலில் குதித்தனர். எரிமலை வெடித்த போது மலையில் இருந்த விழுந்த கல் தாக்கி ஒருவர் உயிர் இழந்தார். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.எரிமலை தொடர்ந்து வெடித்து வான் உயரத்திற்கு சாம்பல் புகையை கக்கியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்