மெதுவாய் சாலையை கடந்த ஆமை..! காத்திருந்த கார் ஓட்டுனர்…இடித்து தள்ளிய டிரக்..!
அமெரிக்காவில் ஆமை ஒன்று சாலையைக் கடக்க ஓட்டுநர் காரை நிறுத்தியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
உலகில் உள்ள அனைவருக்கும் இரக்கக்குணம் உள்ளது என்பது பொதுவான ஒன்று. அதிலும் பலருக்கு செல்லப்பிராணிகள் மற்றும் வன விலங்குகளிடையே இரக்கம் என்பது சற்று அதிகமாகவே இருக்கும். அந்த இரக்கமே சில சமயங்களில் அவர்களுக்கு ஆபத்தாகவும் முடிந்து விடும்.
அது போன்ற ஒரு சம்பவம்தான் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், வாகன ஓட்டுநர் ஒருவர் புளோரிடா நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆமை ஒன்று சாலையை கடக்க முயற்சிப்பதை கவனித்துள்ளார். அதன்பின், அவர் தனது காரை நிறுத்தி ஆமை சாலையைக் கடக்கும் வரை நிறுத்தினார்.
இதனையடுத்து, சாலையில் பின்னால் வேகமாக வந்துகொண்டிருந்த டிரக் ஒன்று சரியான நேரத்தில் பிரேக் செய்யத் தவறியதால் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தற்பொழுது, இந்த விபத்து நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.