இன்று முஸ்லிம்களின் தனித்துவ பண்டிகை ரம்ஜான்..! நோன்பு கடைபிடிக்கும் முறை மற்றும் வாழ்த்துக்கள் இதோ..!
இன்று (ஏப்ரல் 22) முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும், முஸ்லிம்கள் மிக முக்கியமான பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை மிகவும் கோலாகலமாக கொண்டாடுவதுண்டு. இஸ்லாமியர்கள் ஒன்பதாம் மாதத்தில், இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்த மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள், நோன்பை அனுசரிக்கின்றனர்.
வானில் தோன்றும் பிறை நிலவைக் கொண்டே இந்த நாள் முடிவு செய்யப்படும் என்பதால், உலகம் முழுவதும் பல்வேறு தேதிகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை, ஏப்ரல் 21 (வெள்ளிக்கிழமை) அல்லது ஏப்ரல் 22 (சனிக்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.
மக்களின் நம்பிக்கையின்படி, முகமதுநபி முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுசரிப்பதாக கூறப்படுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பானது, இசுலாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நோன்பானது வயது வந்த இசுலாமியர்களுக்கு கட்டாயமான ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த நாட்களில், இஸ்லாமியர்கள், விடியற்காலையிலிருந்து சூரிய மறைவு வரை உண்ணாநோன்பு இருக்கும் போது, முஸ்லிம்கள் உணவு உட்கொள்ளல், நீர் மற்றும் திரவங்களை அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் பாலியல் உறவுகளில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தவிர்த்து விடுகிறார்கள். நோன்பு தொடங்குவதற்கு முன்னதாக எடுக்கப்படும் உணவானது ஸஹர் எனவும் நோன்பு முடிந்த பின் எடுத்துக் கொள்ளப்படும் உணவானது இப்தார் எனவும் கூறுகின்றனர்.
ரம்ஜான் பண்டிகையின் போது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாழ்த்துக்கள் சிலவற்றை காண்போம்.
- இந்த ரமலான் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும்.
- உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட ரமலான் வாழ்த்துக்கள். அல்லாஹ் உங்கள் வாழ்க்கையை அன்பு, கருணை மற்றும் இரக்கத்தால் நிரப்புவார்.
- இந்த ரமலானில், உங்கள் எல்லா முயற்சிகளிலும் நீங்கள் நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.
- உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ரமலான் வாழ்த்துக்கள். அல்லாஹ் உங்களை வெற்றி மற்றும் மகிழ்ச்சியின் பாதையில் வழிநடத்துவார்.
- அல்லாஹ்வின் மீது உண்மையான நம்பிக்கையுடன் அன்பு, மகிழ்ச்சி மற்றும் சகோதரத்துவத்தின் பண்டிகையான இந்த ரமலானைக் கொண்டாடுவோம்.
- இந்த ரமலானை ஆன்மிகத்தோடும், சுய சிந்தனையோடும் கடைப்பிடிப்போம். அல்லாஹ் நமக்கு வழி காட்டுவார்.
- அல்லாஹ் உங்களை ஆசீர்வதித்து, உங்கள் வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான அடியிலும் உங்களுக்கு பலத்தை வழங்குவார். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.