இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை கருப்பு வெள்ளி, பெரிய வெள்ளி என்று கிறிஸ்தவர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.
இன்று உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி திருநாளை அனுசரித்து வருகின்றனர். இன்றைய தினம், கிறிஸ்தவர்கள் மாமிசம் உண்ணாமல், மது அருந்தாமல் விரதம் இருப்பர். பைபிள் வாசிப்பு, ஜெப வழிபாடுகளில் ஈடுபடுவது, இயேசு கிறிஸ்து பற்றி பிரசங்கம் போன்றவைகளில் ஈடுபடுவர்.
பெரிய வெள்ளி வரலாறு :
இயேசு கிறிஸ்துவை ரோமானியர்கள் கைது செய்து சிலுவையில் அறைந்த நாளை பெரிய வெள்ளி புனித வெள்ளி என்று கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். இந்த நாளானது ஆண்டுதோறும் மார்ச் 20 முதல் ஏப்ரல் 23 இடைப்பட்ட நாட்களில் வரும். புனித வெள்ளி இந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகிறது.
ஈஸ்டர் பண்டிகை :
ரோமானியர்களால் சிலுவையில் அறையப்பட்டு புதைக்கப்பட்ட இயேசு கிறிஸ்து மூன்றாவது நாளான ஈஸ்டர் பண்டிகை நாளன்று உயிர்த்தெழுந்தார். இதனை கொண்டாடும் வகையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கருப்பு வெள்ளி :
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் அனைத்து இடங்களிலும் புனித வெள்ளி, கருப்பு வெள்ளி என்று அழைக்கப்படும். இன்றைய நாளில் கிறிஸ்தவ வழிபாடுகள் அனுசரிக்கப்படுகின்றன. இது கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமை இந்த புனித வெள்ளியானது கொண்டாடப்படுகிறது.
புனித வெள்ளியின் மகிமை :
மனித குலத்தின் பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் ரத்தம் சிந்தி பிராய்சித்தம் செய்ததாகவும், அதற்கு விசுவாசமாக இருப்பதற்காக மக்கள் பெரிய வெள்ளியை புனித வெள்ளியாக ஆண்டுதோறும் அனுசரிப்பதாகவும் கூறப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் மரணித்து அவர் உயிர்த்தெழுந்தது மூலம் மக்களின் பாவங்களை மன்னிக்க உதவ கடவுளாக மாறினார் என்று கிறிஸ்தவர்கள் இந்த புனித வெள்ளியை அனுசரித்து வருகின்றனர்.
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…