குழந்தைகளின் தனிப்பட்ட தகவலை திருடிய ‘TikTok’ நிறுவனத்திற்கு 16 மில்லியன் அபராதம்.!
இங்கிலாந்து: யுனைடெட் கிங்டம் தகவல் பாதுகாப்பு ஆணையர் அலுவலகம், அந்நாட்டு குழந்தைகளின் தனிப்பட்ட தகவலை தவறாகப் பயன்படுத்துவது உட்பட, ‘தகவல் பாதுகாப்புச் சட்டத்தை’ மீறியதற்காக சீனாவுக்குச் சொந்தமான வீடியோ பகிர்வு தளமான TikTok-க்கு கிட்டத்தட்ட அமெரிக்க பண மதிப்பின்படி, 16 மில்லியன் அபராதம் விதித்துள்ளது.
அதாவது, 13 வயதுக்குட்பட்ட 1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை விதிகளை மீறி 2020-ல் டிக்டாக் தளத்தைப் பயன்படுத்த அந்நிறுவனம் அனுமதித்துள்ளது. இதரனால், டிக்டாக் வயதுக்குட்பட்ட குழந்தைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கத் தவறியது, தகவலை எவ்வாறு சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த சரியான விளக்கத்தை பயனர்களுக்கு வழங்கவில்லை.
இந்நிலையில், 2018 மே மற்றும் 2020 ஜூலைக்கு இடையில் நடந்த இந்த விதி மீறல்களுக்கு அபராதம் பொருந்தும் என்று அந்நாட்டு தகவல் பாதுகாப்பு கட்டுப்பாடு அலுவலகம் அறிவித்துள்ளது.
மேலும், உங்கள் குழந்தைகள் இயற்பியல் உலகில் இருப்பதைப் போலவே டிஜிட்டல் உலகிலும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த சட்டங்கள் உள்ளன. அந்தச் சட்டங்களை டிக்டாக் கடைப்பிடிக்கவில்லை என்று இங்கிலாந்து தகவல் ஆணையர் ஜான் எட்வர்ட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், கனடா, நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகியவை ஆரம்ப கட்டத்திலேயே இந்த டிக்டாக் செயலியை தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.