டிக்டாக்கை முடக்கியது பிரிட்டிஷ் நாடாளுமன்றம்..!
பொழுதுபோக்கு செயலியான டிக்-டாக்கை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் முடக்கியது.
சீன பொழுதுபோக்கு செயலியான டிக்டாக், பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நாட்டு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருந்தது. பயனர்களின் விபரங்களை அது சேகரிப்பதாக தகவல் வந்ததையொட்டி இந்த முடிவை பல அரசுகள் எடுத்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது பிரிட்டிஷ் நாடாளுமன்றம் டிக்டாக்கை முடக்கியுள்ளது.
அரசு ஊழியர்களின் சாதனங்களிலிருந்து டிக்டாக்கை தடை செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து, ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் மற்றும் லார்ட்ஸ் ஆகிய இரு ஆணையங்களும் டிக்டாக்கை அனைத்து நாடாளுமன்ற இரு அவைகளில் உள்ள உறுப்பினர்களின் சாதனங்கள் மற்றும் நாடாளுமன்ற நெட்வொர்க்கில் பயன்படுத்துவதை முடக்கியுள்ளது.
முன்னதாக அமெரிக்கா, கனடா, பெல்ஜியம், ஐரோப்பிய ஆணையம் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகாரப்பூர்வ சாதனங்களில் டிக்டாக்கின் பயன்பாட்டை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.