ஆப்கானிஸ்தானில் இன்று அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் மதியம் 12:19 மணிக்கு ரிக்டர் அளவில் 5.6 ஆகவும், மதியம் 12:11 மணிக்கு ரிக்டர் அளவில் 6.1 ஆகவும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 6.2 ரிக்டர் அளவில் சமீபத்திய நிலநடுக்கம் மதியம் 12:42 மணிக்கு பதிவாகியுள்ளது.
அதாவது, மதியம் 12.11 மணியளவில் ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று மதியம் 12:42 மணியளவில் மேற்கு ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.
ஹெராட் நகருக்கு வடமேற்கே 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், இதனிடையே ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது. இது உள்ளூர் மக்களிடையே பீதியைத் தூண்டியது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது குடியிருப்பாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறினர், ஆனால் உயிரிழப்புகள் அல்லது கட்டமைப்பு சேதங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம், 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு 1,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டது மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து காணப்பட்டனர்.
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானில் மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும். ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது, குறிப்பாக இந்து குஷ் மலைத்தொடரில், இது யூரேசிய மற்றும் இந்திய டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பிற்கு அருகில் உள்ளது என கூறப்படுகிறது.
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…