ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துவோர் தேசத்துரோகிகள்! ரஷ்ய அதிபர் உத்தரவு!

ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு உத்தரவு என ரஷ்ய அதிபர் தகவல்.
உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாட்டு ராணுவ படைகளும் தாக்குதல் நடத்தி கொண்டு தான் வருகிறார்கள். இதில், ரஷ்ய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது, உக்ரைன் ராணுவம் பதிலடியும் கொடுத்து வருகிறது. இருப்பினும், உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அந்நாடு மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இது ரஷ்யாவுக்கு பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில் தான், ரஷ்யா வின் தனியார் ராணுவ குழுவான வாக்னர் குழுவின் கூலிப்படை அந்நாட்டுக்கு எதிராக திரும்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா சார்பில் களமிறக்கப்பட்ட வாக்னர் கூலிப் படைகள் சண்டையிட்டு வந்தது. அப்போது, ரஷ்ய ராணுவம், வாக்னர் கூலிப்படைகளைத் தாக்கியதாக குற்றசாட்டு எழுந்தது. இதனால், ரஷ்யாவுக்குள்ளே அரசு ராணுவம், தனியார் ராணுவம் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.
ரஷ்ய ராணுவம் தனது படைகளைத் தாக்கியதாக குற்றம் சாட்டிய ரஷ்ய தனியார் ராணுவ நிறுவனமான வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின், ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்தார். ரஷ்யாவின் ராணுவத் தலைமையை அழிப்போம். எங்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டோம். இனி எங்கள் வழியில் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம். ராணுவத் தலைமை மீதான தனது விமர்சனம் ஒரு சதி அல்ல, நீதிக்கான மாற்று வழி என்றார்.
உக்ரைன் போரை எதிர்க்கொள்ள ரஷ்யா சார்பில், களமிறக்கப்பட்ட வாக்னர் கூலிப் படைகள் மீது ரஷ்ய ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் ரஷ்யாவின் தலைமையத்துவத்தை கவிழ்க்க, படையெடுப்போம் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், தனது படைகள் உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்குள் நுழைந்துவிட்டதாக கூறினார். அதுமட்டுமில்லாமல், ரஷ்யாவுக்குள் புகுந்த வாக்னர் கூலிப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. வாக்னர் கூலிப் படைக்கு தாக்குதலுக்கு எதிராக மாஸ்கோவின் முக்கிய இடத்தில் ரஷ்ய ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் கூறுகையில், ரஷ்யாவில் ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏதுந்துபவர்கள், கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் தேச துரோகிகள். தேச துரோகத்தில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்தார்.
ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். மேலும், கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள வாக்னர் ஆயுத குழுவினரை கண்டதும் சுட்டு தள்ள ரஷ்ய அதிபர் உத்தரவிட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வாக்னர் ஆயுத குழுவினரை தீவிரவாத அமைப்பு என்று அறிவித்ததாகவும் கூறப்படுகிறது
இதனிடையே, வாக்னர் ஆயுத குழுவினர் கிளர்ச்சியால் மாஸ்கோவில் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யபட்டுள்ளது. கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆயுதக்குழு ரஷ்யாவின் தெற்கு ராணுவ தலைமையகத்தை கைப்பற்றியதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025