இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு இந்தியாவும் ஒரு காரணம்.? ஜோ பைடன் அதிர்ச்சி தகவல்.!
பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அமைப்பான ஹமாஸ் அமைப்பு இம்மாதம் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரல் ராணுவம் தற்போது வரை காசா நகர் மீது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. காசா நகர் ஹமாஸ் அமைப்பினரின் உறைவிடமாக இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா நேரடி ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு பயணம் செய்து , இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் அமெரிக்கா அளிக்கும் என உறுதியளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு.! 22 பேர் உயிரிழப்பு.!
இதனை தொடர்ந்து, அண்மையில் ஹமாஸ் தாக்குதல் தொடர்பாக முக்கிய தகவலை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அதாவது, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு காரணம் இந்தியா – ஐரோப்பா இடையேயான சரக்கு போக்குவரத்து திட்டம் தான் என கூறியுள்ளார்.
கடந்த மாதம் இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா முதல் ஐரோப்பா வரையில் , இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), சவுதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் வகையில் இந்த சரக்கு போக்குவரத்து பாதை (IMEEC) அமைக்கப்பட திட்டம் வகுக்கப்பட்டது.
இந்த சரக்கு போக்குவரத்து பாதையானது சீனா, பாகிஸ்தான் , ஈரான் என செல்லும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் (BRI) திட்டத்திற்கு மாற்றாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தான் , ஈரானின் தூண்டுதலின் பெயரில் ஹமாஸ் அமைப்பினர் , இந்தியா – ஐரோப்பா இடையேயான சரக்கு போக்குவரத்து திட்டமான IMEECவில் முக்கிய அங்கமாக இருக்கும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தபடுகிறது என அதிர்ச்சி தகவலை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.