ரஷ்யாவை அடுத்து உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி.! இதுவே முதல்முறை…
உக்ரைன் : ஆகஸ்ட் 23ம் தேதி பிரதமர் மோடி உக்ரைன் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக உக்ரைன் செல்லவுள்ளதால், இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உக்ரைன் மீது 2022இல் ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் 2 ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் நிலையில், பல்வேறு தரப்பினரும் இந்தியா தலையிட்டு போரை நிறுத்த வலியுறுத்துகின்றனர். சமீபத்தில், ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து உரையாடியதற்கு ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இத்தாலியில் ஜி7 மாநாட்டில் மோடியை சந்தித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் வரும்படி அழைப்பு விடுத்தார். இதனையேற்று, மோடி உக்ரைனுக்கு அடுத்த மாத முதல் வாரம் செல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
அவர் ரஷ்யா சென்று அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு, உக்ரைன் பிரதமர் மோடியின் பயணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி ரஷ்யா பயணம் :
22வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக புதினின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை 8ம் தேதி அன்று இரண்டு நாள் பயணமாக மாஸ்கோ சென்றார். அப்பொழுது, அணுசக்தி, கப்பல் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.