நிலவின் மிகத் தெளிவான புகைப்படம் இதுதான்..! வெளிட்ட ஆஸ்ட்ரோ புகைப்படக் கலைஞர்..!

Detailed image of Moon

ஆண்ட்ரூ மெக்கார்த்தி என்ற வானியற்பியலாளர் நிலவின் மிகத் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

பூமியில் இருந்து வானத்தை பார்க்கும்பொழுது நட்சத்திரங்கள், நிலா என மிகவும் அற்புதமாக இருக்கும். அதனை எப்பொழுது நாம் அருகில் சென்று பாப்போம் என்ற ஏக்கமும் வரும். இன்னும் சிலருக்கு அதனை புகைப்படம் எடுக்கும் ஆசையும் இருக்கும்.

அதேபோல, ஆண்ட்ரூ மெக்கார்த்தி என்ற வானியற்பியலாளர் ஒருவர் நிலவின் மிகத் தெளிவான புகைப்படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் நிலவின் முழு அளவிலான புகைப்படத்தை உருவாக்க இரண்டு தொலைநோக்கிகள் மற்றும் 2,80,000 தனிப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

தற்பொழுது அவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் ஜிகாபிக்சலுக்கும் மேல் உள்ளது. அதனால் இந்த புகைப்படத்தைப் பதிவிறக்குவது கணினியை பாதிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்