24 வருடத்தில் இது புதிய மாற்றம் ! பாதுகாப்பு அமைச்சரை பதவியிலிருந்து தூக்கிய விளாடிமிர் புடின் !!
Vladimir Putin : ரஷ்யாவின் ஜனாதிபதியான விளாடிமிர் புடின் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரை பதவியிலிருந்து நீக்கி உள்ளார்.
ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த செர்ஜி ஷோய்குவை ஜனாதிபதி புடின் தற்போது பதவி நீக்கம் செய்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உக்ரைன் மற்றும் ரஷ்யா நாட்டிற்கு இடையிலான போர் நடைபெற்று கொண்டே வருகிறது. மேலும் இந்த போரில் உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் ரஷ்ய துருப்புகள் தொடர்ந்து முன்னேறி கொண்டே வருகின்றன.
இந்நிலையில் ஜனாதிபதி புடின், ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான செர்ஜி ஷோய்குவை பதவி நீக்கம் செய்து அவருக்கு பதிலாக புதிய பாதுகாப்பு அமைச்சராக 65 வயது நிரம்பிய ஆண்ட்ரி பெலோசோவை பணியமர்த்தியுள்ளார். இவர் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மிக்க அனுபவம் வாய்ந்தவர் ஆவார். மேலும், பதிவியிலிருந்து நீக்கிய செர்ஜி ஷோய்குவை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக (Secretary Of National Security Council) ஜனாதிபதியான புடின் நியமித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து அதிபர் விளாடிமிர் புடின் மேற்கொண்ட மிக முக்கியமான இராணுவ மறு சீரமைப்பாக இது தான் பார்க்கப்படுகிறது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் செர்ஜி ஷோய்குவும், அதிபர் புடினும் நீண்டகால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளே இல்லாத சூழலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 5-வது முறையாக மீண்டும் ரஷ்யாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 24 ஆண்டுகளாக ரஷ்யாவின் அதிபராக இருந்து வரும் புடின் இராணுவ மறு சீரமைப்பாக எடுத்த முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது.