திடீரென நகைக்கடைக்குள் நுழைந்த கும்பல்! அமெரிக்காவில் இந்தியருக்கு நடந்த அதிர்ச்சி!

Robbers

அமெரிக்கா : முகமூடி அணிந்த இருபது பேர் அமெரிக்காவில் புனேவைத் தலைமையிடமாகக் கொண்ட நகைக்கடையில் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. கலிபோர்னியாவின் சன்னிவேலில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமாக ‘பிஎன்ஜி ஜூவல்லர்ஸ்’ என்ற நகைக்கடை உள்ளது.

அந்த நகைக்கடையில் ஒரே ஒரு பாதுகாவலர் மட்டும் நின்றுகொண்டு கையில் போனை வைத்து கொண்டு கடையை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது கடையை நோட்டமிட்டு இருந்த 20 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் சுத்தியலுடன் விறு விறுவென கடையின் கண்ணாடிகளை உடைக்க தொடங்கினார்கள். கண்ணாடி அடைந்தவுடன் விறு விறுவென அந்த கும்பல் கடையில் இருந்த  நகைகளை கொள்ளையடிக்கவும் தொடங்கினார்கள்.

20 பேர் இருந்த காரணத்தால் ஒண்ணுமே செய்யமுடியாமல் மிகவும் அதிர்ச்சியுடன் அந்த பாதுகாவலர் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு இருந்தார். கடைக்குள் இருந்த நகைகள் அனைத்தையும் திருடி எடுத்துக்கொண்டு காரில் அந்த கும்பல் சென்றுள்ளனர். இது கடைக்குள் இருந்த சிசிடிவி கேமரா காட்சியில் பதிவாகியுள்ளது. அந்த காட்சியை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். கடையில் உள்ள நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தால் கடையின் உரிமையாளர் இந்தியரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கொள்ளையடித்த அந்த நபர்கள் நெடுஞ்சாலை 101 வழியாக அதிவேகமாக சென்ற நிலையில், போலீசார் பின் தொடர்ந்து சென்றார்கள். இறுதியில், ஐந்து சந்தேக நபர்களான டோங்கா லட்டு, தவகே எஸஃபே, ஓபா அஹோமனா, கிலிஃபி லியாட்டோவா மற்றும் அஃபுஹியா லவாக்கியாஹோ ஆகியோரை கைது செய்தனர். இவர்கள்,  தங்கள் காரைக் கைவிட்டுவிட்டு  தப்பிக்க முயன்றனர். போலீஸ் நாயின் உதவியால், ஐந்து பேரையும் கைது செய்தனர் தற்போது இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்