ரஷ்யாவுக்கு எதிரான பகடைக்காயாக உக்ரைன் நாட்டை பயன்படுத்துகின்றனர் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேச்சு.
ஓராண்டு நிறைவு:
உக்ரைன் நாட்டுக்கு எதிராக போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து ஒரு முக்கிய நிகழ்வில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மீண்டும் சொல்கிறோம், போரை தொடங்கியது அவர்கள் தான். நாங்கள் போரை நிறுத்தவே பலத்தை பயன்படுத்தினோம். உக்ரைன் உடனான பிரச்சனையை அமைதியான வழியில் தீர்க்க எல்லா வகையிலும் நாங்கள் முயற்சிக்கிறோம். மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான பகடைக்காயாக உக்ரைன் நாட்டை பயன்படுத்துகின்றனர் என்றும் உக்ரைனில் தாக்குதலைத் தொடர உறுதியளிப்பதாகவும் கூறினார்.
போருக்கு காரணம்:
அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் “வரம்பற்ற அதிகாரத்தை” நாடுகின்றன என்று கூறி புடின், மோதலை தொடங்குவதற்கு மேற்கு நாடுகள் தான் காரணம் என குற்றம் சாட்டினார். இந்த பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம், ஆனால் எங்கள் முதுகுக்குப் பின்னால், மிகவும் வித்தியாசமான காட்சி தயாராகி வருகிறது.
பதிலடி கொடுப்போம்:
படிப்படியாக, நாங்கள் எதிர்கொள்ளும் நோக்கங்களை கவனமாகவும் முறையாகவும் தீர்ப்போம். உக்ரைனில் ஏற்பட்டுள்ள விரிசல்களுக்கு மேற்குலகமே முழுப் பொறுப்பு. மேற்கத்திய நாடுகள் உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற முயல்கின்றன, நாங்கள் சரியான முறையில் பதிலளிப்போம். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கீவ் பயணத்தை மேற்கொண்ட ஒரு நாள் கழித்து, புதின் இவ்வாறு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…