போரை தொடங்கியது அவர்கள் தான்..பகடைக்காயாக உக்ரைன் – அதிபர் புதின் பேச்சு

Default Image

ரஷ்யாவுக்கு எதிரான பகடைக்காயாக உக்ரைன் நாட்டை பயன்படுத்துகின்றனர் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேச்சு.

ஓராண்டு நிறைவு:

war21

உக்ரைன் நாட்டுக்கு எதிராக போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து ஒரு முக்கிய நிகழ்வில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மீண்டும் சொல்கிறோம், போரை தொடங்கியது அவர்கள் தான். நாங்கள் போரை நிறுத்தவே பலத்தை பயன்படுத்தினோம். உக்ரைன் உடனான பிரச்சனையை அமைதியான வழியில் தீர்க்க எல்லா வகையிலும் நாங்கள் முயற்சிக்கிறோம். மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான பகடைக்காயாக உக்ரைன் நாட்டை பயன்படுத்துகின்றனர் என்றும் உக்ரைனில் தாக்குதலைத் தொடர உறுதியளிப்பதாகவும் கூறினார்.

போருக்கு காரணம்:

ukrainerussia21

அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் “வரம்பற்ற அதிகாரத்தை” நாடுகின்றன என்று கூறி புடின், மோதலை தொடங்குவதற்கு மேற்கு நாடுகள் தான் காரணம் என குற்றம் சாட்டினார். இந்த பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம், ஆனால் எங்கள் முதுகுக்குப் பின்னால், மிகவும் வித்தியாசமான காட்சி தயாராகி வருகிறது.

பதிலடி கொடுப்போம்:

putinwar21

படிப்படியாக, நாங்கள் எதிர்கொள்ளும் நோக்கங்களை கவனமாகவும் முறையாகவும் தீர்ப்போம்.  உக்ரைனில் ஏற்பட்டுள்ள விரிசல்களுக்கு மேற்குலகமே முழுப் பொறுப்பு. மேற்கத்திய நாடுகள் உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற முயல்கின்றன, நாங்கள் சரியான முறையில் பதிலளிப்போம்.  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கீவ் பயணத்தை மேற்கொண்ட ஒரு நாள் கழித்து, புதின் இவ்வாறு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்