இனி இவர்கள் ஐபோன் பயன்படுத்த தடை; ரஷ்யா அறிவிப்பு.!

Iphones Russia

அரசாங்க ஊழியர்கள் ஐபோன்கள் பயன்படுத்த ரஷ்ய அரசு தடை  விதித்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் உளவு பார்பததாக எழுந்த புகாரின் அடிப்படையில், ரஷ்ய அரசாங்கம் ஐபோன்கள் பயன்படுத்த தடைவிதிக்க தொடங்கியுள்ளது. அதாவது அரசுப்பணியில் இருக்கும் ஊழியர்கள் அலுவலக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் போது ஐபோன் உள்ளிட்ட ஆப்பிளின் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐபோனில் இருந்து அலுவலக சம்மந்தப்பட்ட மின்னஞ்சலைத் திறக்கும்போது, ஹேக் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக ஐடி துறையின் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது ரஷ்யாவில் அமெரிக்க உளவு அமைப்புகளின் உளவு பார்க்கும் முயற்சி அதிகரித்துள்ளதைக் குறிப்பதாக தெரிகிறது.

மேலும் அரசாங்க பணிகளுக்கு இனி ஐபோன்கள் பாதுகாப்பாக கருதப்படாது என்றும் இதற்கு மாற்றாக வேறு வழியை நாடவேண்டும் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, ஜனாதிபதி விளாடிமிர் புதின், முக்கியமான தகவல் உள்கட்டமைப்பில்” ஈடுபட்டுள்ள ஏஜென்சிகள் மற்றும் அமைப்புகளை, சுகாதாரம், அறிவியல் மற்றும் நிதித்துறையை உள்ளடக்கிய ஒரு மென்பொருளை 2025க்குள் உருவாக்க அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்