மூன்றாவது உலகப்போர் இருக்காது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, கோல்டன் குளோப் விருது விழாவில் கூறியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்றுவரும் வேளையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, மூன்றாவது உலகப்போருக்கான வாய்ப்பு இருக்காது என்று கூறியுள்ளார். கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் வீடியோ மூலம் ஜெலென்ஸ்கி கூறினார். ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடியவில்லை, ஆனால் போரின் வெற்றிப்பக்கம் திரும்புகிறது என்று கூறினார்.
முதல் உலகப்போர் மில்லியன் கணக்கான மக்களை பலி கொண்டது, இரண்டாம் உலகப்போர் பத்து மில்லியன் கணக்கான மக்களை உயிர் வாங்கியது. இதனால் மூன்றாம் உலகப்போர் இருக்காது, இது தொடர்ச்சியான போர்த்தொகுப்பு கிடையாது என்று ஜெலென்ஸ்கி மேலும் கூறினார்.
உக்ரைன் நிலத்தில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை நாங்கள் தடுத்து நிறுத்துவோம் என்று அவர் தெரிவித்தார். 1943 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் முடிவடையும் நேரத்தில், இந்த கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா முதன்முதலில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனின் சுதந்திரத்தை ஆதரித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய ஜெலென்ஸ்கி, நாங்கள் உக்ரைனின் முழு சுதந்திரத்திற்கு போராடுகிறோம். நாங்கள் வெற்றி பெறும் அந்த நாளில் நீங்கள் அனைவரும் எங்களுடன் இருப்பீர்கள் என்று என்று நான் நம்புகிறேன் என கூறினார்.
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…