போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை – இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

Israel

ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பில்லை என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. ஹமாஸ் மைப்பு இருக்கும்வரை மனிதாபிமான உதவிகள் எதுவும் செய்யமுடியாது எனவும் திட்டவட்டமாக இஸ்ரேல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒருவரத்துக்கும் மேலாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை தொடங்கியதை அடுத்து, இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால், ஹமாஸ் அமைப்புக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று தனது தாக்குதலை இஸ்ரேல் அதிகரித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ஒடுக்கப்பட்டது போல் ஹமாஸ் இயக்கமும் ஒடுக்கப்பட வேண்டும் என கூறி இஸ்ரேலிய படை தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது.

10வது நாளாக நீடிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்! இஸ்ரேலின் தாக்குதலில் 2,670 பேர் பலி!

இஸ்ரேல் – ஹமாஸ் தொடர் தாக்குதல் இன்று 10ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. காசாவில் ஹமாஸ் படையினரின் இடங்களை குறி வைத்து இஸ்ரேல் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அங்கு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இந்த தொடர் மோதலில் இஸ்ரேலியர்கள் 1,300-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், காசாவில் பலி எண்ணிக்கை 2,670 ஆக உயர்ந்துள்ளன. 9,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எல்லை தாண்டிய தாக்குதல்: ஹமாஸ் பிடியில் 199 பணயக்கைதிகள் – இஸ்ரேல் ராணுவம் தகவல்!

இந்த சூழலில் ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பில்லை என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அதாவது, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரையில் இந்த போர் நிறுத்தப்படாது என அறிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு இருக்கும்வரை மனிதாபிமான உதவிகள் எதுவும் செய்ய முடியாது எனவும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

ஒரே குறிக்கோள் ஹமாஸ் அமைப்பினரை ஒடுக்குவதே என கூறப்படுகிறது. அதற்கேற்றாற் போல, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா பகுதியில் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரபடுத்தி வருகிறது. இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காசா பகுதியில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும், ஹமாஸ் அமைப்பினரிடம் 199 பிணைக்கைதிகளாக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்