Categories: உலகம்

அமெரிக்காவில் பரபரப்பு…கடற்கரை நடைபாதையில் துப்பாக்கிச்சூடு… 9 பேர் காயம்.!!

Published by
பால முருகன்

அமெரிக்காவின் ஹாலிவுட் எனும் இடத்தில் உள்ள புளோரிடாவில் கடற்கரை பிராட்வாக் அருகே நேற்று இரவு 7 மணியளவில் நூற்றுக்கணக்கானோர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 1 வயது முதல் 17 வயது வரையிலான 4 குழந்தைகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் மெமோரியல் பிராந்திய மருத்துவமனை மற்றும் ஜோ டிமாஜியோ குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட இந்த துப்பாக்கிசூடு மோதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ” துப்பாக்கிசூடு சத்தம் கேட்டதும் அங்கிருந்த மக்கள் அச்சத்துடன் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடுவதைக் காணலாம்.

மேலும், இந்த  துப்பாக்கிசூடு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு சந்தேக நபரை போலீசார் திவீரமாக தேடி வருகின்றனர். திடீரென துப்பாக்கிசூடு நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

12 mins ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

9 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

12 hours ago

சைலண்டாக 2 போன்களை அறிமுகம் செய்த ஜியோ! அம்பானி போட்ட பாக்க பிளான்?

இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…

12 hours ago

ரிக்கி பாண்டிங், சேவாக்கை கழட்டிவிட்ட டெல்லி! பயிற்சியாளராக களமிறங்கும் ஹேமங் பதானி!

டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…

13 hours ago

அசாமில் ரயில் தடம்புரண்டு விபத்து! சிலருக்கு காயமா? விளக்கம் கொடுத்த முதல்வர்!!

அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு…

13 hours ago