பிரேசில்: பிரேசிலைச் சேர்ந்த பாலோ கேப்ரியல் டா சில்வா பாரோஸ் மற்றும் கட்யூசியா லீ ஹோஷினோ என்ற அழகான க்யூட் தம்பதியினர் தான் இந்த உலகத்தில் மிக குறுகிய தம்பதியினர் என்று சாதனை படைத்துள்ளனர். இதனால் இவர்கள் உலக கின்னஸ் புத்தகத்திலும் அங்கீகரிக்கபட்டுள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டில் சந்தித்த இந்த காதல் ஜோடி, தங்கள் உறவை மேம்பபடுத்துவதற்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வலுவான பிணைப்பில் இருந்துள்ளனர். மேலும் இந்த 15 வருடங்களில் சமூக அழுத்தங்களுக்கு அடி பணிவதற்கு பதிலாக, இந்த தம்பதியினர் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டும், தங்கள் தனித்துவமான உடல் பண்புகளை ஏற்றுக்கொண்டும், நீடித்த ஒரு கூட்டாண்மையை வளர்த்துக் கொண்டுள்ளனர்.
கின்னஸ் உலக சாதனைகளின் படி, இந்த ஜோடியின் ஒட்டு மொத்த உயரம் 181.41 செ.மீ ஆகும். பாலோவின் உயரம் 90.28 செ.மீ மற்றும் கட்யூசியாவின் உயரம் 91.13 செ மீ ஆகும். இவர்களின் இந்த கின்னஸ் உலக சாதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த செய்தி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கின்னஸ் உலக சாதனை படைத்த இந்த தம்பதியினர் இது குறித்து பேசிய போது, “நாங்கள் உருவத்தில் குறுகியவர்களாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு பெரிய இதயங்கள் மற்றும் எங்கள் வாழ்வில் உள்ள ஒவ்வொருவரிடமும் நிறைய அன்பு உள்ளது.
எங்கள் வாழ்க்கையில் சவால்கள் இல்லாமல் இல்லை, ஆனால் இந்த சவால்களை ஒன்றாக சமாளிக்க போகிறோம் என்பதை நினைத்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று கூறியுள்ளனர். தற்போது முறையே 31 மற்றும் 28 வயதான இந்த தம்பதியினர் ஆவணப்படுத்தப்பட்ட மிகக் குறுகிய திருமணமான ஜோடி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…