உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டது- ஐக்கிய நாடுகள் அமைப்பு.!
உலக மக்கள் தொகை இன்று(நவ-15) 800 கோடியை தொட்டு விட்டது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு கணக்கிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் கணக்கீட்டின் படி உலகத்தின் மொத்த மக்கள்தொகை இன்று நவ-15இல் 800 கோடியை தொட்டு விட்டது. இது மனித வளர்ச்சியின் ஒரு மைல்கல் என்று கருதப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் சமீபத்திய கணிப்பின்படி உலக மக்கள்தொகை 2030இல் 850 கோடியையும், 2050இல் 970 கோடியையும், 2100இல் 1040 கோடியையும் எட்டிவிடும் என்று தெரிவித்துள்ளது. வருடாந்திர உலக மக்கள்தொகை கணக்கு அறிக்கை வெளியிட்ட தகவலின்படி உலகமக்கள் தொகை விகிதம் 1950 க்கு பிறகு 2020இல் 1% குறைந்தது.
700கோடியிலிருந்து 800கோடி மக்கள் தொகை வருவதற்கு 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. தற்போதைய மக்கள் தொகை விகிதம் குறைந்து வருவதனால், 900 கோடியை எட்டுவதற்கு குறைந்தது 15 ஆண்டுகள், அதாவது 2037இல் இந்த மக்கள்தொகை 900 கோடியை எட்டிவிடும் என்று கணித்துள்ளது.
உலகமக்கள் தொகையில் சீனா மற்றும் இந்தியா இரண்டும் 140கோடிக்கும் மேலான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் கணிப்பின்படி மக்கள் தொகையில் இந்தியா 2023இல் சீனாவை முந்திவிடும் என்று கூறியுள்ளனர்.