உலகின் மிகப்பழமையான ஜீன்ஸ் ஜோடி ₹94 லட்சத்துக்கு விற்பனை.!
மூழ்கிய கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள உலகின் பழமையான ஜீன்ஸ் ஜோடி ஏலத்தில் ₹94 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது.
1857 ஆம் ஆண்டு சூறாவளியில் மூழ்கிய கப்பலில் கண்டெடுக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பழமையான ஜீன்ஸ் ஜோடி அமெரிக்க ஏலத்தில் $114,000 (சுமார் ₹94.16 லட்சம்)க்கு விற்கப்பட்டது. கனரக சுரங்கத் தொழிலாளியின் பணிக்காக உடுத்தும் உடையான, ஐந்து பட்டனுடன் கூடிய வெள்ளை ஜீன்ஸ் மூழ்கிய கப்பலிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
வட கரோலினா கடற்கரையில் 1857 ஆம் ஆண்டு கப்பல் விபத்துக்குள்ளானதில் கப்பலின் மூழ்கிய உட்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த மிகப் பழமையான ஜீன்ஸ் ஜோடியை, ஏல அதிகாரிகள் $114,000 (சுமார் ₹94.16 லட்சம்)க்கு விற்கப்பட்டதாக அறிவித்தனர்.
ஹோலாபிர்ட் வெஸ்டர்ன் அமெரிக்கன் கலெக்ஷன்ஸ் படி, கடந்த வார இறுதியில் ரெனோவில் ஐந்து பட்டனுடன் கூடிய வெள்ளை, கனரக சுரங்கத் தொழிலாளியின் பழமையான பேன்ட் உட்பட 270 கோல்ட் ரஷ் கால கலைப்பொருட்களும் சேர்த்து மொத்தம் $1 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பேண்ட்கள் அந்த காலத்தில் மொத்த விற்பனையாளராக இருந்த ஸ்ட்ராஸின் தயாரிப்பாக இருக்கலாம் என்றும், பேன்ட்களின் சின்னமான ஜீன்ஸ் மாறியதன் ஆரம்ப கால பதிப்பாக இந்த பேண்ட்கள் இருக்கலாம் என்று வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.