உலகின் நம்பர் 1 பணக்காரர்… மீண்டும் டாப்புக்கு வந்த எலான்மஸ்க்.!
உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை எலான் மஸ்க் மீண்டும் பெற்றுள்ளார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள தகவின்படி, உலகின் மிகவும் பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார். பிரெஞ்சு நிறுவனமான லூயிஸ் உட்டன் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி மஸ்கின் நிகர மதிப்பு சுமார் 192 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. பெர்னார்ட் அர்னால்ட்டின் மதிப்பு 187 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 3-வது மாற்று 4-வது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 144 பில்லியன் டாலர்கள் மற்றும் பில் கேட்ஸ் 125 பில்லியன் டாலர்களுடன் அடுத்தடுத்த இடம் வகிக்கின்றனர்.
சமீபத்திய வர்த்தகத்தில் அர்னால்ட் நிறுவனத்தின் பங்குகள் 2 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தது மற்றும் டெஸ்லா பங்குகள் உயர்ந்ததை அடுத்து மஸ்க் முன்னிலைக்கு சென்றுள்ளார்.