மனிதர்கள் இல்லாமல் இயங்கும் உலகின் முதல் சூப்பர் மாடல் ரோபோட் காபி ஷாப், துபாயில் திறக்கப்படுகிறது.
நாளுக்கு நாள் உலகில் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் வேளையில் மனிதர்களின் தேவையே இனி தேவைப்படாது என்பது போல் பல அற்புத நிகழ்வுகள் அங்கங்கு நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. அந்தவகையில் உலகின் முதல் சூப்பர் மாடல் ரோபோட் காபி ஷாப், துபாயில் டோனா சைபர்-கஃபேவால் திறக்கப்பட இருக்கிறது.
மனிதர்களே இல்லாமல் இயங்கும் இந்த காபி ஷாப், உலகிலேயே முதன் முறையாக திறக்கப்படும் சூப்பர் மாடல் ரோபோட் காபி ஷாப் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு 2023இல் இந்த காபி ஷாப் திறக்கப்பட இருக்கிறது. 24 மணிநேரமும் செயல்படும் வகையில், சூப்பர் மாடல் ரோபோட் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய டோனா சைபர்-கஃபே முடிவு செய்துள்ளது.
மேலும் சுயசேவை மூலம் வழங்கப்படும் ஐஸ் கிரீம் மெஷின்கள் மற்றும் ரோபோட் கைகளில் வழங்கப்படும் காபி என அதிநவீன அம்சங்கள் காபி ஷாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சூப்பர் மாடல் ரோபோட்களின் உதிரிபாகங்கள் ரஷ்யாவிலிருந்து வரவழைக்கப்பட்டதாகவும், அதற்கு ரோபோட்-C2 என பெயர் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த ரோபோட் பெண் வடிவத்தில் மனித உருவம் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் வாடிக்கையாளர்களை நினைவில் வைக்கும்படியான நினைவும் கொடுக்கப்பட்டு, உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளும் படியான இந்த ரோபோட் கதைகளையும் சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…