எலிகளை கொல்லும் பணி…ஒரு வருடத்திற்கு ரூ.1.20 கோடி சம்பளம்.!!
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் அதிகரித்து வரும் எலிகளை கொல்ல, நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிக்கு வருடத்திற்கு 1.20 கோடி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் எலிகள் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நியூயார்க்கில் மட்டும் சுமார் 80 லட்சம் எலிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சுகாதார பிரச்சனை ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், எலிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முன்னதாக ஏற்கனவே, எலிகளை கொல்ல அதிகாரிகளை நியமித்திருந்தது.
அதனை தொடர்ந்து நியூயார்க் நகர மேயர் தற்போது எலிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியில் வல்லுநரான கேத்லீன் என்பவரை எலிகளை கடுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள துறையின் இயக்குனராக நியமித்து, அவருக்கு ஆண்டு ஒன்றிற்கு 1.26 கோடி லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், அங்கு எலி தொல்லை அதிகரித்து வருவதால், எலிகளை கொல்லும் பதவிக்கு வரும் அதிகாரிகளுக்கு வருடத்திற்கு ரூ.1.20 கோடி சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.