ஆன்லைனில் ஜீன்ஸ் ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
ஆன்லைனில் ஜீன்ஸ் பேண்ட் ஆர்டர் செய்த பெண்ணுக்கு, பார்சலில் வெங்காயம் வந்ததால், அதிர்ச்சியில் உறைந்தஹ் இளம்பெண்.
இன்று ஆன்லைன் ஷாப்பிங் வசதி உள்ளதால் பலரும் தங்களது தேவைக்கேற்ற உடைகளையோ, பொருட்களையோ ஆன்லைன் மூலமாகவே பெற்றுக் கொள்கின்றன. ஆனால் இந்த ஆன்லைன் ஷாப்பிங்கில் சில தவறுகள் நடக்கிறது.
லண்டனில் இங்கிலாந்தின் டெடாப் என்ற பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் செகண்ட் ஹேண்ட் பேஷன் தளத்தில் இளம் பெண் ஒருவர் ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு பை வெங்காயம் கிடைத்துள்ளது. இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து சப்ளையரிடம் அப்பெண் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கு முன்னதாக பீகாரில், ஆன்லைன் ஸ்டோரில் ட்ரோன் கேமராவை ஆர்டர் செய்த போது, ஒரு கிலோ உருளைக்கிழங்கு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.