அமெரிக்க அரசு பயணம் முடிந்தது… எகிப்து புறப்பட்டார் பிரதமர் மோடி .!
பிரதமர் மோடி, அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு எகிப்து புறப்பட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, தனது அமெரிக்க அரசு முறைப்பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்கப் பயணத்தின் போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடிக்கு, வெள்ளை மாளிகையில் அரசு விருந்து அளிக்கப்பட்டது.
பல்வேறு முக்கிய தலைவர்கள், அதிகாரிகளை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் சந்தித்து உரையாடினார். மேலும் பிரதமரின் இந்த பயணத்தில் அமெரிக்க அதிபர் பைடன், மோடிக்கு டி-ஷர்ட் ஒன்றையும் பரிசளித்துள்ளார். பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 2023 இல் இந்தியாவின் குடியரசு தின விழாவில் ‘தலைமை விருந்தினராக’ கலந்துகொண்ட எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி அழைத்ததன் பேரில் பிரதமர் மோடி, எகிப்துக்கு பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.<
After the successful visit to the USA, PM @narendramodi emplanes for Egypt. pic.twitter.com/a5YX446nTG
— PMO India (@PMOIndia) June 24, 2023
/p>