சீனாவின் ஹூவாய் மற்றும் இசட்.டி.இ நிறுவனங்களிலிருந்து தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்க அமெரிக்கா தடை.!
சீனாவின் ஹூவாய் மற்றும் இசட்.டி.இ(ZTE) நிறுவனங்களிலிருந்து தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்குவதற்கு அமெரிக்கா தடை.
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துவதாகக் கூறி, சீனாவின் ஹூவாய் மற்றும் இசட்.டி.இ(ZTE) நிறுவனங்களிலிருந்து தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதற்கும், அமெரிக்காவில் விற்பதற்கும் அமெரிக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இரண்டு நிறுவனங்களும், அமெரிக்க ஃபெடரல் (கம்யூனிகேஷன் கமிஷன்(FCC) தகவல் தொடர்பு ஆணையத்தால் அச்சுறுத்தல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அமெரிக்க FCC ஆனது, சீனாவின் டஹுவா டெக்னாலஜி, வீடியோ கண்காணிப்பு நிறுவனமான ஹாங்சோ ஹைக்விஷன் டிஜிட்டல் டெக்னாலஜி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹைடெரா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட கண்காணிப்பு உபகரணங்களை விற்பனை செய்வதையும் இறக்குமதி செய்வதையும் தடை செய்துள்ளது.
சமீப காலமாக, சீன தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் அதிகளவில் எச்சரிக்கையாக உள்ளனர். எங்கள் எல்லைக்குள் நம்பத்தகாத தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. நமது தேசிய பாதுகாப்பை பாதுகாக்க அமெரிக்க FCC உறுதியாக உள்ளது என்று FCC ஆணையத்தின் தலைவி ஜெசிகா ரோசன்வொர்செல் கூறினார்.