ஓஹியோவில் நேர்ந்த சோகம் ..! 3 வயது சிறுவன் கத்தியால் குத்தி படுகொலை!
ஓஹியோ: அமெரிக்கவில் இருக்கும் ஒரு பகுதியான ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் க்ளீவ்லேண்ட் நகரத்திலிருந்து 15 மைல் தொலைவில் உள்ள ஒரு கடையின் கார் பார்க்கிங்கில் பிற்பகல் 3 மணி அளவில் சோகத்தை ஏற்படுத்தும் கொடூர சம்பவமானது அரங்கேறி உள்ளது.
கடந்த திங்கள்கிழமை அன்று ஒரு தாயும், மகனும் ஓஹியோவில் உள்ள ஜெயண்ட் ஈகிள் எனும் கடையில் ஷாப்பிங் செய்து விட்டு காரில் வீடு திரும்பவதற்கு கார் பார்க்கிங் சென்றுள்ளனர். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு மர்ம பெண் பின்னாடி இருந்து ஓடி வந்து அந்த சிறுவனை கத்தியால் குத்தியிருக்கிறார்.
அவரை தொடர்ந்து அருகில் தாயையும் சேர்த்து அந்த மர்ம பெண் கத்தியால் தாக்கியிருக்கிறார். இதனால் ‘பலத்த காயமடைந்த அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், பலத்த காயமடைந்த அந்த தாய் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளார்’ என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணனையும் மேற்கொண்டு வருகின்றனர்.