விமானம் பறக்கும்போதே கழன்று விழுந்த டயர்… வைரலாகும் வீடியோ!
Viral Video: ஜப்பான் புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் டேக்-ஆப் ஆனபோது டயர் ஒன்று கழன்று விழுந்ததால் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சான் பிரான்சிஸ்கோவில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் (போயிங் 777) விமானம் 235 பயணிகள் மற்றும் 14 பணியாளர்களுடன் ஜப்பான் புறப்பட்டு சென்றது. ஆனால், ஓடுதளத்தில் (runway) இருந்து டேக்-ஆப் ஆனபோது, விமானத்தில் இருக்கும் 6 டயர்களில் ஒன்று கழன்று தரையில் விழுந்தது.
Read More – டிஜிட்டல் படைப்பாளிகளுக்கு மத்திய அரசின் முதல் அங்கீகாரம்.! விருதுகளை வழங்கினார் பிரதமர் மோடி.!
சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஊழியர்களின் பார்க்கிங் பகுதியில் டயர் விழுந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும், அந்த டயர் ஒரு காரின் பின்பக்க கண்ணாடியை சேதப்படுத்தி, அருகில் உள்ள தடுப்பு வேலியில் மோதி நின்றுள்ளது. இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
Read More – பாக்க ஒரே மாதிரி இருக்கா? ஆனா வேற வேற..10 நொடியில் கண்டுபிடிச்சு அசத்துங்க பாப்போம்!
அதேசமயம், ஒரு டயர் கழன்று விழுந்தும் தொடர்ந்து பறந்த அந்த விமானம், பாதுகாப்பு காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. அதுவும், ஓடுதளத்தின் பாதியிலேயே விமானம் நிறுத்தப்பட்டதால், பின்னர் அங்கிருந்து இழுத்துச் சென்று, பயணிகள் வேறு விமானத்துக்கு மாற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் விமானத்தில் இருந்த பயணிகள் பதற்றத்தில் உறைந்தனர். கடந்த 2002ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த விமானம், டயர்கள் சேதமடைந்தாலோ, சில டயர்கள் இல்லாமல் இருந்தாலும், பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
Read More – ஒருபோதும் ரஷ்ய அதிபருக்கு நான் தலைவணங்க மாட்டேன்.. ஜோ பைடன் சபதம்!
மேலும், இந்த சம்பவம் குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாகத்தால் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் அதன் டயர்களில் ஒன்று கழன்று தரையில் விழும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.