பெண்களின் உயர்கல்வி தடை குறித்து தலிபான் அரசு விளக்கம்!
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டதற்கு தாலிபான் அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இந்த வார தொடக்கத்தில் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு, காலவரையற்ற தடை விதித்து தலிபான்கள் தலைமையிலான அரசு உத்தரவிட்டிருந்தனர். பல்கலைக்கழகங்களுக்கு வரும் அந்த பெண் மாணவர்கள், ஹிஜாப் குறித்த எந்த அறிவுறுத்தல்களையும் பின்பற்றவில்லை.
மேலும் அவர்கள் திருமணத்திற்குச் செல்வது போல் ஆடை அணிந்து பல்கலைக்கழகங்களுக்கு வந்ததாக தெரிவித்தனர். இது குறித்து பேசிய தலிபான் உயர்கல்வி அமைச்சர் நேதா முகமது நதீம், பெண் மாணவர்கள் சரியான ஆடைக் கட்டுப்பாடு உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்றாததால், பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு கல்விக்கான காலவரையறையற்ற தடை விதிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.