பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதித்த தாலிபான்கள்..! கதறி அழும் பெண்கள்..!
பெண் கல்விக்கு தாலிபான்கள் தடை விதித்ததை அடுத்து பல்கலைக்கழகத்தில் பெண்கள் கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரல்
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு காலவரையற்ற தடை விதித்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சகம், அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு இந்த உத்தரவிற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை, பெண்களின் கல்வியை நிறுத்தி வைக்கும் உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பெண் கல்விக்கு தாலிபான்கள் தடை விதித்ததை அடுத்து பல்கலைக்கழகத்தில் பெண்கள் கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Student girls are crying as Taliban sending them back home as they are now banned to study at Universities.
The terrorist group has no respect for Women’s rights. Right to study is as important as right to live . #SlavaAfghanistan ?!! Slava Afghan Women pic.twitter.com/CPNyQHI5ak
— Savan Qadir (@savanQadir) December 21, 2022