அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?
ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. கிழக்கு மாகாணங்களில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் விரைவில் முடிவுகள் தெரியவரும். இந்திய நேரப்படி நாளை அதிகாலை தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்கலாம்.
50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு செய்யப்பட்டு, 270 பேரின் ஆதரவைப் பெறுபவரே 47வது அதிபராக தேர்வு செய்யப்படுவார். ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் டிரம்ப் – கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும், இந்த தேர்தலில் 13 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 18 கோடியே 65 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் அமெரிக்க சட்டத்தின் படி, முன்கூட்டியே 7 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
வெற்றியை தீர்மானிக்கும் 7 மாகாணங்கள்
பென்சில்வேனியா, ஜார்ஜியா, வட கரோலினா, மிச்சிகன், அரிசோனா, விஸ்கான்சின் மற்றும் நெவாடா ஆகிய ‘Swing States’ எனப்படும் 7 மாகாணங்களில் தொடரும் இழுபறியாய் இருந்து வருகிறது. இந்த மாகாணங்களில் விழும் வாக்குகளால் அதிபர் பதவி தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் தேர்தல் சமனில் முடிந்தது:
பாரம்பரியமாக நள்ளிரவில் வாக்கு செலுத்தும் வழக்கம் உள்ள டிக்ஸ்வில் நாட்ச் கிராமத்தில் மொத்தமுள்ள 6 வாக்காளர்களில் டொனால்ட் டிரம்பிற்கு 3, கமலா ஹாரிஸுக்கு 3 பேர் வாக்களித்ததால் முடிவு சமனில் முடிந்தது.
பல்வேறு மாகாணங்களில் வாக்கெடுப்பு தொடங்கும் நேரம் குறித்து தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது
- கனெக்டிகட்
- இந்தியானா
- கென்டக்கி
- மைனே
- நியூ ஹாம்ப்ஷயர்
- நியூ ஜெர்சி
- நியூயார்க்
- வர்ஜீனியா
5.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது
- ஓஹியோ
- வட கரோலினா
- மேற்கு வர்ஜீனியா
- வெர்மான்ட்
5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது
- அலபாமா
- டெலவேர்
- வாஷிங்டன், டி.சி
- புளோரிடா
- ஜார்ஜியா
- இல்லினாய்ஸ்
- கன்சாஸ்
- மேரிலாந்து
- மாசசூசெட்ஸ்
- மிச்சிகன்
- மிசூரி
- பென்சில்வேனியா
- ரோட் தீவு
- தென் கரோலினா
- டென்னசி
6.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது
- அரிசோனா
- அயோவா
- லூசியானா
- மினசோட்டா
- தெற்கு டகோட்டா
- வடக்கு டகோட்டா
- ஓக்லஹோமா
- டெக்சாஸ்
- விஸ்கான்சி