உயிரோடு இருக்கும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் குடும்பம்.? இலங்கை ராணுவ அதிகாரி கூறிய தகவல்.!
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், இலங்கை நாட்டிற்கு எதிராக உள்நாட்டு போரில் ஈடுபட்டிருந்த போது 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டார். அவரது மனைவி, மகள், மகன் என அனைவரும் இந்த போரில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி ஓர் அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருந்தார். அதாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதினி மற்றும் அவர்களது மகள் துவாரகா இன்னும் உயிருடன் இருப்பதாக அவர் கூறியிருந்தார்.
மதிவதியின் இந்த கூற்றை இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் திட்டவட்டமாக மருத்துள்ளர். அவர் கூறுகையில், மதுவதினி சகோதரி கூறுவதில் உண்மை இல்லை. இது மக்களை ஏமாற்றும் முயற்சி ஆகும். இது ஒருவிதமான தந்திரம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னதாக பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் உயிருடன் இருப்பதாகவும், சரியான நேரத்தில் பொது வெளியில் வருவார்கள் என்றும் சமீபத்தில் தமிழ்தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.