இப்போதெல்லாம் ஒரு மணி நேரம் செய்ய வேண்டிய வேலையை இப்போது சில நிமிடங்களில் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. நவீன தொழில்நுட்பம் வந்த நிலையில் பல நிறுவனங்களில் மனித உழைப்பின் தேவையை குறைந்துள்ளது. ஆனால் இந்த தொழில்நுட்பத்தால் வரும் ஆபத்துகளுக்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இல்லையெனில் என்ன நடக்கும் என்பது தெரியாது. அப்படி ஒரு சம்பவம் தென் கொரியாவில் நடந்துள்ளது. ஒரு தொழிற்சாலையில் காய்கறி நிரப்பும் பெட்டி என நினைத்து வேலை செய்ய ஊழியரை தூக்கி வைத்த ரோபோ. தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாய விளைபொருள் விநியோக மையத்தில் காய்கறிப் பெட்டிகளை எடுத்து சீல் செய்யும் பணிக்கு ரோபோக்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ரோபோவின் சென்சார் செயல்பாடுகளை அங்கு உள்ள ஊழியர் ஒருவர் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. நிறுவன ஊழியரை காய்கறிப் பெட்டி என நினைத்து தூக்கி கன்வேயர் பெல்ட்டில் வைத்திருக்கிறது. ரோபோவின் இறுக்கமான பிடியிலிருந்து அந்த ஊழியர் தப்ப முடியாமல் திணறியுள்ளார். கன்வேயர் பெல்ட் உள்ளே சென்ற அந்த ஊழியரின் முகம் மற்றும் மார்பு பகுதி நசுக்கப்பட்டது. படுகாயமடைந்த நிலையில் அந்த ஊழியரை சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ரோபோவிடம் சிக்கி பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். முன்னதாக மே மாத தொடக்கத்தில் தென் கொரியாவில் ஒரு ரோபோ ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையில் ரோபோவிடம் சிக்கி அங்கு வேலை செய்ய ஊழியர் காயமடைந்தார். அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் இன்டஸ்ட்ரியல் மெடிசின் வெளியிட்ட ஆய்வின்படி, 1992 முதல் 2017 வரை அமெரிக்காவில் தொழில்துறை ரோபோக்களால் 41 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…