அமெரிக்கா-ரஷ்யா மோதல் அபாயம் அதிகம்-ரஷ்ய தூதர்.!
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே மோதலுக்கான அபாயம் அதிகம் இருப்பதாக அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் கூறியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்றுவரும் வேளையில் உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகள் செய்து வருவதாக ரஷ்யா தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கான ரஷ்யாவின் தூதர் அனடோலி அன்டோனோவ், அமெரிக்க-ரஷ்யா உறவுநிலை வலுவிழந்து வருகிறது.
இதனால் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இரு நாடுகளுக்கிடையே மோதலுக்கான அபாயம் அதிகரித்து வருவதாக அன்டோனோவ் கூறியதாக ரஷ்ய செய்தித்தொடர்பு நிறுவனமான TASS தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தனது போர் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.
உக்ரைன் ராணுவம் போரில் வெற்றி அடையாமல் விடாது. நாங்கள் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறோம் என்று கூறினார். மேலும் உக்ரைன், அமெரிக்காவிடமிருந்து கூடுதலாக $1.8 பில்லியன் இராணுவ உதவியைப் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.