Categories: உலகம்

Good Bye ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ‘ராயல் வால்ட்’ டில் அடக்கம் செய்யப்பட்டது

Published by
Muthu Kumar

ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) உடல் நலக்குறைவால் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார்.

பிரிட்டனின் மிகவும் நீண்ட காலம் ராணியாக இருந்தவர், 96 வயதான ராணி இரண்டாம் எலிசபெத். 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 6 முதல் ராணியாக தனது ஆட்சியை ஆரம்பித்தார். 70 ஆண்டுகள் ராணியாக இருந்த அவர், பிரிட்டன் ஆட்சி வரலாற்றில் மிக அதிக காலம் ராணியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் எலிசபெத்தின் உடல் பால்மோரல் அரண்மனையிலிருந்து அவரது உடல் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு முதற்கட்டமாக கொண்டு வரப்பட்டது. அதன்பின் பொதுமக்களின் அஞ்சலிக்காக வெஸ்ட்மின்ஸ்டர்  அரங்கில் வைக்கப்பட்டிருந்தது.

இறுதிச்சடங்கு நடைபெறும் இடமான அபே தேவாலயத்துக்கு ராணியின் உடல் பீரங்கி வண்டியின் மூலம் ஏற்றிக்கொண்டு வரப்பட்டது.அவரது உடல் வரும் வழியில்  பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் மல்க தங்களது ராணிக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

Queen’s funeral

அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஜெர்மனி மற்றும் இத்தாலியின் தலைவர்கள், ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பனீசி, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, ஜப்பான் நாட்டின் பேரரசர் நருஹிட்டோ, பேரரசி மசாக்கோ, மற்றும் கென்யாவின் அதிபர் வில்லியம் ரூட்டோ பல்வேறு உலகத்தலைவர்கள் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் என 2000க்கும் மேற்பட்டவர்கள் லண்டனுக்கு வருகை புரிந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவும் , பிரிட்டன் ராணிக்கு தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.இந்த இறுதி ஊர்வலமானது பிரிட்டன் முழுவதும் சுமார் 125 திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டது .

அனைவரும், ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு  2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். “God Save the King” என்ற பாடல் ராணியின் இறுதி ஊர்வலத்தில் ஒலிக்கப்பட்டது. ராணியின் உடல் அடக்கத்திற்காக வெஸ்ட்மின்ஸ்டர் அபேயிலிருந்து வெலிங்டன் ஆர்ச் க்கு கொண்டு வரப்பட்டது.

புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு பாரம்பரிய முறைப்படி பிராத்தனைகள் நடைபெற்றது.தேவாலயத்திற்கு கீழே உள்ள ‘ராயல் வால்ட்’ டில்  மறைந்த கணவர் இளவரசர் பிலிப்பிற்கு அடுத்ததாக ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Recent Posts

Trump Vs Kamala: பரபரக்கும் இறுதிக்கட்ட பரப்புரை.. அடுத்த அமெரிக்க அதிபர் யார்? கருத்துக் கணிப்பு

அமெரிக்கா : நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. உலக நாடுகள்…

5 hours ago

ஷாக்கிங் வீடியோ: மின்னல் தாக்கி கால்பந்து வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்.!

பெரு : பெரு நாட்டில் Juventud Bellavista மற்றும் Familia Chocca ஆகிய இரண்டு கிளப்புகளுக்கு இடையில் Huancayoவில் இடம்பெற்ற…

6 hours ago

நடிகை நிவேதா பெத்துராஜிடம் வழிப்பறி? 8 வயது சிறுவனின் அதிர்ச்சி செயல்!

சென்னை : மதுரையில் பிறந்த நிவேதா பெத்துராஜ் 11 வயது முதல் துபாயில் வசித்து வந்தார். அங்கேயே படிப்பை முடித்துவிட்டு மாடலிங்…

6 hours ago

இபிஎஸ் கூறியது பொய்.! இதுதான் உண்மை.! வெளியான பரபரப்பு தகவல்.!

சென்னை : இன்று (நவம்பர் 4) சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் பகுதியில் மதுராந்தகம்…

8 hours ago

ஆக்ரா அருகே விமானப்படை விமானம் விபத்து.!

உத்தரப்பிரதேசம் : ஆக்ரா அருகேIAF-ன் MiG-29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம்…

8 hours ago

அட்ராசக்க..பம்பர் வாய்ப்பு! LCU-வில் என்ட்ரி கொடுக்கும் “கட்சி சேர” பிரபலம் சாய் அபியங்கர்!

சென்னை : கட்சி சேர என்ற ஆல்பம் பாடலுக்கு இசையமைத்துப் பாடியதால் ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் சாய் அபியங்கர்.…

8 hours ago