Good Bye ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ‘ராயல் வால்ட்’ டில் அடக்கம் செய்யப்பட்டது
ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) உடல் நலக்குறைவால் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார்.
பிரிட்டனின் மிகவும் நீண்ட காலம் ராணியாக இருந்தவர், 96 வயதான ராணி இரண்டாம் எலிசபெத். 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 6 முதல் ராணியாக தனது ஆட்சியை ஆரம்பித்தார். 70 ஆண்டுகள் ராணியாக இருந்த அவர், பிரிட்டன் ஆட்சி வரலாற்றில் மிக அதிக காலம் ராணியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் எலிசபெத்தின் உடல் பால்மோரல் அரண்மனையிலிருந்து அவரது உடல் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு முதற்கட்டமாக கொண்டு வரப்பட்டது. அதன்பின் பொதுமக்களின் அஞ்சலிக்காக வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் வைக்கப்பட்டிருந்தது.
இறுதிச்சடங்கு நடைபெறும் இடமான அபே தேவாலயத்துக்கு ராணியின் உடல் பீரங்கி வண்டியின் மூலம் ஏற்றிக்கொண்டு வரப்பட்டது.அவரது உடல் வரும் வழியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் மல்க தங்களது ராணிக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஜெர்மனி மற்றும் இத்தாலியின் தலைவர்கள், ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பனீசி, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, ஜப்பான் நாட்டின் பேரரசர் நருஹிட்டோ, பேரரசி மசாக்கோ, மற்றும் கென்யாவின் அதிபர் வில்லியம் ரூட்டோ பல்வேறு உலகத்தலைவர்கள் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் என 2000க்கும் மேற்பட்டவர்கள் லண்டனுக்கு வருகை புரிந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவின் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவும் , பிரிட்டன் ராணிக்கு தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.இந்த இறுதி ஊர்வலமானது பிரிட்டன் முழுவதும் சுமார் 125 திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டது .
அனைவரும், ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். “God Save the King” என்ற பாடல் ராணியின் இறுதி ஊர்வலத்தில் ஒலிக்கப்பட்டது. ராணியின் உடல் அடக்கத்திற்காக வெஸ்ட்மின்ஸ்டர் அபேயிலிருந்து வெலிங்டன் ஆர்ச் க்கு கொண்டு வரப்பட்டது.
புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு பாரம்பரிய முறைப்படி பிராத்தனைகள் நடைபெற்றது.தேவாலயத்திற்கு கீழே உள்ள ‘ராயல் வால்ட்’ டில் மறைந்த கணவர் இளவரசர் பிலிப்பிற்கு அடுத்ததாக ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
The Lord Chamberlain symbolically breaks his Wand of Office and places it on the Queen Elizabeth’s coffin.
The wand will be buried with Her Majesty. pic.twitter.com/MDl2BcDoN9
— Royal Central (@RoyalCentral) September 19, 2022