உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்த முயற்சி.! போப் ஆண்டவர் – உக்ரைன் அதிபர் ரகசிய சந்திப்பு.?

Volodymyr Zelensky

உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த முயற்சிக்கும் விதமாக போப் ஆண்டவர் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து கிட்டதட்ட ஒன்றறை  ஆண்டுகள் ஆக போகின்றன. இன்னும் இரு நாட்டுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு உலக நாடுகள் நேரடியாகவும் , மறைமுகமாகவும் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர சமாதான முயற்சி மேற்கொள்ள ஆரம்பத்தில் இருந்து போப் பிரான்சிஸ் விருப்பம் தெரிவித்து வந்தார். போர் தொடர்பாக இருநாட்டு தலைவர்களை சந்தித்தும் பேச போப் விருப்பம் தெரிவித்து இருந்தார் இருந்தும் இந்த சந்திப்பு நடக்காமல் இருந்தது.

இந்நிலையில், போப் பிரான்சிஸ் மற்றும்  உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சந்திப்பு நிகழ உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்புக்கு உக்ரைன் அதிபர் அனுமதி வழங்கியதாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் போப்பிற்கு தெரிவித்ததாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை, உக்ரைன் அதிபரின் சந்திப்பு விவரங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்பட்டது இல்லை. அது போலவே இந்த சந்திப்பும் பாதுகாப்பு கரங்களுக்காக  வெளியிடப்படவில்லை என தெரிகிறது. போப் பிரான்சிஸை சனிக்கிழமை ஐரோப்பிய நாடான வத்திக்கானில் உக்ரைன் அதிபர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்