துருக்கி அதிபர் எர்கோடன் புகைப்படத்தின் மீது மீசை வரைந்த சிறுவன் கைது.
துருக்கி அதிபர் எர்கோடன் மூன்றாவது முறையாக அந்நாட்டின் அதிபராக பதவி ஏற்றுள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக பதவியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிபர் எர்கோடன் புகைப்படத்துடன் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டியில் 16 வயது சிறுவன் ஒருவன் ஹிட்லரை போன்ற மீசையை துருக்கி அதிபர் எர்கோடனுக்கு வரைந்துள்ளார். மேலும் அதில் அவதூறான கருத்துக்களை எழுதியதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் சிறுவன் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சிறுவனின் வீட்டை கண்டுபிடித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், சிறுவன் மீசை வரைந்ததாக ஒப்பு கொண்டுள்ளார். இதனையடுத்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது அதிபரை அவமதித்தது தொடர்பாக தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…