தரையிறங்க முயன்ற விமானம்.! கீழே விழுந்து நொறுங்கியதில் 10 பேர் உயிரிழப்பு..!
மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற தனியார் விமானம் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மீது மோதியதில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியுள்ளது.
இந்த விபத்தில் பயணம் செய்த 8 பேர் உட்பட சாலையில் சென்று கொண்டிருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு லங்காவி தீவில் இருந்து கோலாலம்பூருக்கு அருகில் உள்ள சுல்தான் விமான நிலையத்திற்கு விமானம் சென்று கொண்டிருந்ததாக அந்நாட்டின் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.